கோவை : கோவையை கவுண்டம்பாளையம் சேர்ந்த ரோஸ்வர் ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
ரோஸ்வர் ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் , அதன் இயக்குநர்கள் ஆர்.ரவிச்சந்திரன், வாணி, ரகுலன் , சுந்தராமன் ஆகியோர் மீது கோவை மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பிராந்திய மேலாளர் கோபாலகிருஷ்ணன் புகார் அளித்தார். ரோஸ்வர் ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் லிமிடெட் மற்றும் அதன் இயக்குநர்கள் ஐ.ஒ.பி வங்கியிடம் இருந்து சலுகைகளை பெற்று அவற்றை தவறாகப் பயன்படுத்தியதுடன் வங்கியில் இருந்து பெற்ற நிதியை தங்கள் சொந்த நோக்கத்திற்கு மாற்றி இருப்பது தெரியவந்த்து.
இதையடுத்து ஐ.ஓ.பி வங்கிக்கு 27.22 கோடிக்கு தவறான இழப்பை ஏற்படுத்தியது தொடர்பாக ரிசர்வ் வங்கியில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிபிஐயிடம் புகார் தெரிவிக்கப்பட்டது
புகாரின் அடிப்படையில் ரோஸ்வர் ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் அதன் இயக்குனர்கள் மற்றும் உடந்தையாக இருந்த அரசு ஊழியர்கள் மீது கூட்டுசதி, மோசடி, பொது ஊழியர்களை மோசடி செய்தல் உட்பட 4 பிரிவுகளில் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்