கோயம்புத்தூர் : சட்டமன்ற தேர்தலையொட்டி கோவையில் உள்ள 15 காவல் நிலையங்களிலும்பராமரித்து வரும் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றவர்களை வரவழைத்து கோவை பவர்ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் போலீஸ் அதிகாரிகள் அறிவுரை வழங்கும் கூட்டம் நடந்தது இந்த கூட்டத்துக்கு மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் தலைமை தாங்கினார் இதில் துணை போலீஸ் கமிஷனர் ஸ்டாலின் மற்றும் 4 உதவி கமிஷனர்கள் பங்கேற்றனர் இந்தக் கூட்டத்தில் வருகிற தேர்தலின் போது எந்த வகையிலும் ரவுடி தனமான செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் வழிப்பறி செய்வதோ மற்றும் பொதுசொத்துக்களை சேதபடுத்துவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுரை வழங்கப்பட்டது எந்த ஒரு அமைப்புக்கோ அல்லது தனிப்பட்ட நபருக்கோ அடியாட்களாக இருக்கக்கூடாது . சட்டத்திற்கு உட்பட்டு தற்போது செய்து வரும் வழக்கமான பணிகளை மட்டுமே செய்து வர வேண்டும் என்று அறிவுரையும் எச்சரிக்கையும்வழங்கபட்டது. மேலும் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை துணை ஆணையர் முன்பு ஆஜர்படுத்தி அவர்களிடமிருந்து குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டோம் என பிணை பத்திரம் பெறப்பட்டது, மேற்படி நபர்கள் குற்றச் செயலில் ஈடுபடும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்து அனுப்பிவைக்கப்பட்டனர் இந்த கூட்டத்தில் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்ற ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்