கோவை: கோவையில் மேலும் 3 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. காலை 3 பேருக்கு உறுதியாகி இருந்த நிலையில் தற்போது மேலும் 3 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஓரே நாளில் 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை போத்தனூர் காவல்நிலையத்தை மூட உத்தரவு. அங்கு பணியாற்றிய காவலர்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்காலிகமாக வேறு இடத்தில் சிலநாட்களுக்கு போத்தனூர் காவல்நிலையம் இயங்கும் என மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.
கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்