கோவை : கோவையில் பணம் வைத்து மெகா சீட்டாட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ. 2.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவையில் விவசாயத் தோட்டம் மற்றும் பண்ணை வீடுகளில் பணம் வைத்து அடிக்கடி சீட்டாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. போலீசார் அவ்வப்போது சோதனை செய்து சீட்டாட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலையில் க.க சாவடி அருகே பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ஒரு பண்ணை வீட்டில் இன்று காலை நுழைந்தனர். அப்போது அங்கு ஒரு கும்பல் பணம் வைத்து மெகா சீடட்டாட்டம் நடத்தியது கண்டுபிடிக்கபட்டது. இதையடுத்து போலீசார் அதே பகுதியை சேர்ந்த 28 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 2.34 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.