கோவை : மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்கள் ஆகியவர்களின் உத்தரவின்படி வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமை அன்று கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் தனிப்பிரிவுகளிலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு அவைகளின் மீது சட்டத்திற்குட்பட்ட விசாரணை நடத்திய முறையான தீர்வுகள் எடுக்கப்பட்டு வருகின்றன (10/05/2023)ஆம் தேதி கோவை மாநகரில் உள்ள அனைத்து சட்டம் ஒழுங்கு புறநாய்வு பிரிவு காவல் நிலையங்கள் மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் தனி பிரிவுகளில் பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 25 மனுக்களில் சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் ஆகிய இரு தரப்பினரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். காவல்துறையின் விசாரணையின் போது 105 புகார்களில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரராக இரு தரப்பினரும் சமாதானம் ஆகிவிட்டார்கள். 41 மனுக்களில் முறையாக விசாரிக்கப்பட்டு குறைகளுக்கு ஏற்ப இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டவாறு தீர்வு காணப்பட்டது. 14 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 16 மனுக்களில் ஆவணங்களை ஆஜர் படுத்துவது தொடர்பாக விசாரணை நிலுவையில் உள்ளது. 29 மனுக்களில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் காவல்துறை விசாரணையின் போது நீதிமன்றம் சென்று தீர்வு கண்டு கொள்வதாக தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டது. கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்ற விசாரணை செய்த மனுக்கள் மீது தக்க நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்