கோயம்புத்தூர் : கோவையில் பைனான்ஸ் அலுவலகத்தை உடைத்து கொள்ளை முயற்சி.அலாரம் ஒலித்ததால் கும்பல் தப்பி ஓட்டம் கோவை நவம்பர் 19 கோவை பக்கம் உள்ள ஈச்சனாரியில்மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகம் உள்ளது 16-ந் தேதி இரவில் இந்த நிறுவனத்தின் அலாரம் திடிரென்று ஒலித்தது இதைக் கேட்ட காவலாளி வந்து பார்த்தார் அதற்குள் அந்த கொள்ளை கும்பல் தப்பி ஒடி விட்டது. இது குறித்து நிறுவனத்தின் மேனேஜருக்கு தகவல் கொடுத்தார் மேனேஜர் அங்கு வந்து பார்த்த போது நிறுவனத்தின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது மற்றொரு மற்றொரு பூட்டு உடைக்கப்படவில்லை இதுகுறித்து மேனேஜர் ஷேக் உஸ்மான் பாட்சா போத்தனூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள் கொள்ளையர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது நிதி நிறுவனத்தின் அலாரம் ஒலித்ததால் காவலாளி உஷார் ஆனார் இதனால் அங்கிருந்த பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பணம் தப்பியது
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்