கோவை : கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு. தெய்வசிகாமணி சப் – இன்ஸ்பெக்டர் திரு. செல்லமணி ஆகியோர் நேற்று மாலை ரத்தினபுரி செல்லப்ப கவுண்டர் வீதியில் பைக்கில் சந்தேகப்படும்படி வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் அவரிடம் 1500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதை போலீசார் பறிமுதல் செய்தனர் இதையொட்டி அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார் விசாரணையில் அவர் கோவை ரத்தினபுரி நால்வர் லேஅவுட்டை சேர்ந்த. சுந்தர் மகன் விக்கி என்ற சிவபாலன் ( வயது 26) என்பது தெரியவந்தது கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்