கோவை: கோவை, ஆவாராம்பாளையம், மட்டசாலை வீதியில் வசித்து வந்தவர் கன்னியம்மாள்.70. இவரது மகள் துளசிமணிக்கு, கார்த்திக், 25, என்ற மகன், ஒரு மகள் உள்ளனர். கார்த்திக், தங்கை கணவர் தர்மராஜ், 27, ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு, பாட்டி கன்னியம்மாளின் வீட்டில் வைத்து, இருவரும் மது குடித்து கொண்டிருந்தனர்.குடிபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த கார்த்திக், கண்ணாடியால் தர்மராஜை அடிக்க முயன்றார்.இதை கன்னியம்மாள் தடுக்க முயன்றபோது, அவரது கழுத்தில் கண்ணாடி குத்தியது. படுகாயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் இறந்தார்.பீளமேடு காவல்துறையினர், கார்த்திக்கை கைது செய்து விசாரிக்கின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்