கோவை : கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த வெள்ளக்கிணர் பிரிவு வி.கே.எல் நகர் பகுதியில் காலை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வாகனம் மூலம் குப்பைத்தொட்டியில் இருந்து குப்பைகளை அகற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது பிளாஸ்டிக் பையில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் இரண்டு துண்டுகளாக ஆணின் கை கிடந்துள்ளது . இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் உடனடியாக துடியலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கோவை மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாத், மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். இரண்டு துண்டுகளாகக் கிடந்த அந்தக் கையை ஆய்வு செய்த போது அது (45), வயது மதிக்கத்தக்க ஆணின் இடது கை என்பது தெரிய வந்தது. கைரேகை நிபுணர்கள், மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.