கோவை: கோவை உப்பிலிபாளையம் சோமசுந்தரம் மில் ரோட்டில் அலுவலகம் வைத்து இடம் வீடு வாங்கி விற்பது தொடர்பான பிசினஸ் செய்துவரும் கந்தசாமியின் மகன் கதிர்வேல் என்பவரிடம், கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் ஒரு அப்பார்ட்மென்டில் வசித்து வசித்து கொண்டு சொந்தமாக, டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ஜெயகீதா(38) என்பவர், தனது தம்பியின் மனைவி கோகுல் பிரியதர்ஷினி (33) ஆகியோர் குடும்ப நண்பராக பழகி, அவருடைய மற்றொரு அண்ணனின் மகளுக்குஇ கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் படிக்க பணம் கட்டுவதற்கு, வங்கியில் லோன் பெற்றவுடன் இரண்டு மாதங்களில் திருப்பிக் கொடுத்து விடுவதாக, உத்தரவாதம் கொடுத்து பணம் ரூபாய் 35 இலட்சம் கடனாகப் பெற்று, அண்ணன் மகளை மருத்துவ கல்லூரியில் சேர்ந்த பிறகு சொன்னபடி பணத்தை திருப்பி கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்தனர்.
பின்பு ரூபாய் 10 லட்சத்துக்கு கதிர்வேலுக்கு கொடுத்த காசோலை, கையெழுத்து சரியில்லை என்று வங்கியில் இருந்து திரும்ப வந்து விட்டதாகவும், இந்நிலையில் பணம் கேட்டு அவர்கள் வீட்டிற்கு சென்ற வழியில், கதிர்வேலுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் ஏமாற்றமடைந்த கதிர்வேல், கோவை மாநகர காவல் ஆணையர் திரு.சுமித் சரண், இ.கா.ப அவர்களிடம் புகார் கொடுத்தார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு. சுமித் சரண் ஐபிஎஸ் அவர்கள் உத்தரவின்படி, காவல் துணை ஆணையர் திருமதி உமா அவர்களின் மேற்பார்வையில், உதவி ஆணையர் திரு எஸ். சௌந்தரராஜன் அவர்களின் தலைமையில், காவல் ஆய்வாளர் திரு. ரவி, உதவி ஆய்வாளர் கே. ஜமுனா, எஸ்.ரேணுகாதேவி மற்றும் காவல்துறையினர் சென்று குற்றவாளிகளான கோகுல பிரியதர்ஷினி ஆகியோரை கைது செய்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஜெய்கிந் ஜெய கீதா மேலும் பலரிடம் தொழில் தொடங்குவதாக கூறி, பணம் பெற்று மோசடி செய்து ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்தது. கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருவரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்