கோவை : கோவை நவம்பர் 12 கோவையில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஊழியராக (சிராஸ் தார்) வேலை பார்த்து வருபவர் காந்தி குமார் நேற்று இவர் நீதி மன்ற பணியில் இருந்தார் அப்போது அங்கு வந்த வழக்கறிஞர் ஒருவர் நீதிபதிகள் செல்லக்கூடிய பாதை வழியாக சென்றாராம் இதை காந்தி குமார் கண்டித்தார் இதனால் ஆத்திரமடைந்த அந்த வழக்கறிஞர் இவரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் காந்தி குமார் புகார் செய்தார் போலீசார் அந்த வழக்கறிஞர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்