கோயம்புத்தூர் : மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்தவர் (65 ),வயதானவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவையை அடுத்த கோவைப்புதூரில் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகளான (30) வயதான என்ஜினீயர், கோவையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் புனேவில் வசித்தபோது, அங்கு தனியார் நிறுவனத்தில் நிதி ஆலோசகராக வேலை செய்து வந்த அதேப்பகுதியை சேர்ந்த ராஜேஷ் போஜா ஷெட்டி (48) என்பவர் இந்த பெண் என்ஜினீயருடன் பழகினார். அப்போது அவர், நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. திருமணம் நிச்சயம் இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண் என்ஜினீயர், ராஜேஷ் போஜா ஷெட்டியுடன் பேசுவதையும், அவரையும் பார்ப்பதை தவிர்த்து வந்து உள்ளார். இந்த நிலையில் அந்த என்ஜினீயருக்கும், மற்றொருவருக்கும் இடையே திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது இதை அறிந்த ராஜேஷ் போஜா ஷெட்டி நேற்று முன்தினம் கோவைக்கு வந்தார்.
திருமணம் நடக்க உள்ள செல்வபுரத்தில் இருக்கும் திருமண மண்டபத்துக்கு சென்றார். பின்னர் அவர் அந்த பெண் என்ஜினீயரை சந்தித்து நான் உன்னை காதலிக்கிறேன், நாம் 2 பேரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி உள்ளார். தகராறு அதற்கு அவர், உங்களுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது, இந்த நிலையில் நான் உங்களை எப்படி மணந்து கொள்வது என்று கேட்டு உள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அவர் நாம் 2 பேரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் என்னிடம் இருக்கிறது. இதை காட்டி உனது திருமணத்தை தடுத்து நிறுத்திவிடுவேன் என்று கூறி உள்ளார். அத்துடன் பெண்ணின் உறவினர்களிடம் சென்று அவரை எனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி பெற்றோர் ஏமாற்றுவதாக தெரிவித்தார். அத்துடன் அந்த பெண்ணை எனக்கு திருமணம் செய்து கொடுக்கவில்லை என்றால் திருமணத்தை நிறுத்திவிடுவதாக கூறி தகராறில் ஈடுபட்டார். இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினார்கள். பின்னர் திருமண மண்டபத்துக்குள புகுந்து திருமணத்தை தடுத்த நிறுத்த முயன்ற ராஜேஷ் போஜா ஷெட்டியை கைது செய்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்