கோவை : கோவை வெரைட்டி ஹால் ரோடு பக்கமுள்ள உப்பார வீதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சாந்தி (வயது 56) நேற்று மாலை இவர் நேற்று மாலை 6 மணிக்கு அங்கு உள்ள காத்தன் செட்டி வீதியில் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு ஆசாமி திடிரென்று அவரது கழுத்தில் கிடந்த 16 கிராம் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து சாந்தி வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஆசாமி தேடி வருகிறார்கள்.
நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்