கோவை : கோவை பக்கம் உள்ள சீரநாயக்கன்பாளையம் நேதாஜி வீதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். இவர் ஆர் எஸ் புரத்தில் கேன்டின் நடத்திவந்தார். கொரோனா பாதிப்பின் போது கடை மூடப்பட்டதால், இவர் நஷ்டம் அடைந்தார். இவரால் தொடர்ந்து கேன்டின் நடத்த முடியவில்லை. குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் மனமுடைந்த ரங்கராஜ், நேற்று அவரது மனைவி வீட்டில் இல்லாத நேரம் மனைவியின் சேலையை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி கலாமணி ஆர்எஸ் புரம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்