கோவை : கோவை மாநகர காவல் துறையின் நுண்ணறிவு பிரிவு, சிறப்பு நுண்ணறிவு பிரிவு, ஆகியவற்றின் மூலம் களத்தில் சேகரிக்கப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து உடனுக்குடன் பகுப்பாய்ந்து, சட்டம் ஒழுங்கை பாதிக்கக்கூடிய பொது அமைதியை பாதிக்கக்கூடிய எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நுண்ணறிவு பிரிவின் அலுவலக பயன்பாட்டிற்கு தேவையான ஒரு புதிய மென்பொருள் மற்றும் அலைபேசி செயலி ஆகியவற்றை உருவாக்கவும் வேண்டி கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுரையின்படி கோவை மாநகரம் சரவணன் பட்டியில் இயங்கி வரும் KG Invicta Services (KGIS) நிறுவனம் மூலம் ஆக்டோபஸ்( OCTOPUS) என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டது.
(26/5/2023) ஆம் தேதி தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் படைத்தலைவர் டாக்டர் சி. சைலேந்திரபாபு அவர்கள், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மேற்படி ஆக்டோபஸ் மென்பொருளின் சின்னத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பாலகிருஷ்ணன், திரு.ஜெயமுரளி பாலகுரு சுவாமி, தலைமை நிர்வாக இயக்குனர் (CEO), KGIS திரு.சந்தோஷ் சதாசிவன், இயக்குனர் மற்றும் கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். செயல்படும் விதம் குறித்து காவல்துறை இயக்குனர் அவர்கள் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார். மேற்படி மென்பொருளானது ஒரு முன்னோடி திட்டமாக கோவை மாநகர காவல் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன் மென்பொருள் மற்றும் செயலி மேம்படுத்தப்பட்டு எதிர்வரும் காலங்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்