கோவை : கோவை சவுரிபாளையம் ஜீவி ரெசிடென்சியில் வசிப்பவர் டாக்டர் பாலசுப்பிரமணியன் இவர் சித்தாபுதூரில்தனியாக மருத்துவமனை நடத்தி வருகிறார் சம்பவத்தன்று இவரது மனைவி கோகிலா மட்டும் அவரது வீட்டில் தனியாக இருந்தார் அப்போது 3 கார்களில் 15 பேர் கொண்ட ஒரு கும்பல் அவரது வீட்டினுள் நுழைந்தது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டது சில நாட்கள் கழித்து மீண்டும் அதே கும்பல் 4 கார்களில் அவரது வீட்டுக்கு வந்தது தனியாக இருந்த கோகிலாவை மிரட்டி அவரது கணவரையும் திட்டி விட்டுஅந்த கும்பல் தப்பிச் சென்றுவிட்டது இதுகுறித்து டாக்டர் மனைவி கோகிலா சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் போலீசார் சூலூரை சேர்ந்த தமிழரசன் உட்பட 15 பேர் மீது கொலை மிரட்டல் அத்துமீறி நுழைதல் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்கள்
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்