கோவை : கோவை செல்வபுரம் சப் இன்ஸ்பெக்டர் சின்னதுரை நேற்று இரவு சொக்கம்புதூர் ரோட்டில் ரோந்து வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார் அவரிடம் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவும் அவரிடமிருந்து 205 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார். விசாரணையில் அவர் சொக்கம்புதூர் ஜீவா பாதையைச் சேர்ந்த செந்தில்ராஜ் என்ற செல்போன் செந்தில் வயது 37 என்பது தெரியவந்தது. இவர் செல்போனில் மெசேஜ் கொடுத்து கஞ்சா விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்