கோவை : கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பு உள்ளது. இங்கு கடந்த அக்டோபர் மாதம் 20 ந் தேதி நவம்பர் 2 – ந் தேதி ஆகிய நாட்களில் வாக்கிங் சென்று கொண்டிருந்தஇ 2 மூதாட்டிகளிடம் ஒரு ஆசாமி தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டான்.
காவலர் குடியிருப்பில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கண்டு பிடிக்க கோவை மாநகர காவல் ஆணையர் திரு.சுமித் சரண்,IPS உத்தரவின் பேரில், துணை ஆணையர் திரு.உமா மேற்பார்வையில் ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.சுஜாதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள் தீவிரமாக துப்பு துலக்கி அங்கு உள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்தனர். இதில்இ இந்தக் கொள்யை நடத்தியது மதுரையைச் சேர்ந்த மாஜி போலீஸ்காரர் முனீஸ்வரன் வயது 32 என்பது தெரியவந்தது. இவர் 2011 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்து கோவையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். ஒழுங்கீனம் காரணமாக, பணியில் இருந்து நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். தற்போது இவர் கோவை பகுதியில் தங்கியிருந்து இந்தக் கொள்ளையைநடத்தி இருப்பது தெரியவந்தது இவரிடமிருந்து தங்கச்சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்