கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் கோவை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் விதமாகவும் மேற்படி புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையாக கோவை மாவட்டம் முழுவதும் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூ எக்ஸ்டென்ஷன் வீதியில் உள்ள வணிக வளாகத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்துவருவதாக காவல் ஆய்வாளர் திரு. முத்துப்பாண்டி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர்கள் திரு. தாமோதரன், திரு. செல்வநாயகம் மற்றும் திரு.மகேந்திரன் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த மேட்டுப்பாளையம் நியூ எக்ஸ்டென்ஷன் வீதியைச் சேர்ந்த கமாலுதின் என்பவரது மகன் சர்புதின் (38) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 72 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தும், இதேபோல் மேட்டுப்பாளையம் ஊட்டி ரோடு அண்ணாச்சி ராவ் வீதியில் உள்ள மொத்த வியாபார மளிகைக்கடையில் சோதனை செய்ததில் 18 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்த தமீம் அன்சாரி என்பவரது மகன் ராபிதீன்(50) என்பவரை கைது செய்தும்,மேற்படி இரண்டு நபர்களிடம் இருந்து மொத்தம் சுமார் 90 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது புகார் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/gokul.png)
A. கோகுல்