கோவை : கோவை மாநகர், டி1 கடைவீதி காவல் நிலைய சட்டத்திற்கு உட்பட்ட பகுதியான பெரியகடை வீதியில் இன்று அதிகாலையில், சாலையோரத்தில் எவ்வித அரசு அனுமதியும் இல்லாமல் வைக்கப்பட்டு இருந்த, ஒன்று அரை அடி அளவுள்ள அளவுள்ள சிமெண்டால் ஆன விநாயகர் சிலையை, அருகே வசித்து வரும் ராஜப்பன் என்பவர் தனக்கு இடையூறாக உள்ளது என்பதால், மன உளைச்சலில் மேற்படி விநாயகர் சிலையை சேதப்படுத்தி உடைத்துள்ளார்.
இது சம்பந்தமாக கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் டி1 கடைவீதி காவல் நிலைய ஆய்வாளர் திரு.விவேக் அவர்கள் சம்பவ இடம் சென்று விசாரித்ததில், ராஜப்பன் (81) என்பவர்தான் விநாயகர் சிலையை உடைத்ததை ஒப்புக்கொண்டார். அதனடிப்படையில் அவருடைய வயது மற்றும் வயோதிகத்தின் அடிப்படையில் மேற்படியான தவறுகளை செய்யக்கூடாது என்ற அறிவுரை வழங்கி காவல்துறையினர் எச்சரித்து சென்றனர்.
நமது குடியுரிமை நிருபர் A. கோகுல்
நமது குடியுரிமை நிருபர் A. கோகுல்