கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. காலேப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி விரைந்து சென்று கோட்டூர் பேருந்து நிலையத்தில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை ஒரு பையில் வைத்து விற்பனை செய்த பொள்ளாச்சியை சேர்ந்த, திருநீலகண்டர் தெரு, முகமது இக்பால் என்பவரது மகன் முகம்மது அப்பாஸ் (வயது-27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 300 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 1000/- பறிமுதல் செய்யப்பட்டு, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார். இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/gokul.png)
A. கோகுல்