கோவை : கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் சிவராஜ் என்ற கட்டிட தொழிலாளி, தனது இரு சக்கர வாகனத்தை, தேனீர் கடை அருகே நிறுத்தி விட்டு தேநீர் அருந்திவிட்டு, வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து திரும்பி வந்து பார்க்கும்போது, அடையாளம் தெரியாத நபர் சிவராஜன் இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளனர். இது சம்பந்தமாக அன்னூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு செந்தில்குமார் அவர்கள் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு பால்ராஜ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
கோவை மாவட்டம் காரமடை, மரியபுரம் பகுதியில் ஆறுமுகம் மற்றும் அவரது சகோதரர் பேசிக்கொண்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத நபர்கள், அவர்களது 2 செல்போன்களை பறித்து சென்றனர். இது தொடர்பாக காரமடை காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு நாகராஜன் அவர்கள் அப்துல்லா,ரகுநாத் மற்றும் சிவா ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை சிறையில் அடைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்