கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், கோட்டைமேடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் என, 78 பேர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவியர் எழுப்பிய கேள்விகளுக்கு, காவல் ஆணையர் திரு.பாலகிருஷ்ணன், IPS பதில் அளித்தார். தேநீர் விருந்தில் பங்கேற்ற மாணவ, மாணவியர், கமிஷனருடன், குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். பின், மோப்பநாய் பிரிவுக்கு சென்று, செயல்படும் விதம் குறித்து காவல்துறையினரிடம் கேட்டறிந்தனர். இத்திட்டம், வரும் நாட்களில் தொடர்ந்து நடத்தப்படும் என, காவல்துறையினர், தெரிவித்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்
















