கோவை : கோவை நவம்பர் 15 கோவை செட்டிபாளையம் போத்தனூர் ஈச்சனாரி பகுதியில் அறை எடுத்து தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய படுவதாக செட்டிபாளையம் போலீசுக்கு தகவல் வந்தது இதை பிடிக்க செட்டி பாளையம் சப் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் நேற்று அங்குள்ள அன்புநகர் அவுசிங் யூனிட் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார் .அங்கு நின்று கொண்டிருந்த. ஒரு வாலிபரிடம் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தார் அவரிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அவர் கைது செய்யப் பட்டார். அவரது பெயர் முத்துவேல் வயது 19 அன்பு நகர் ஹவுசிங் யூனிட்டில் வசித்து வருகிறார். இவர் கோவை சுற்றுவட்டாரத்தில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு நேரடியாகச் சென்று கஞ்சா அடைத்த சிகரெட் விற்பனை செய்தது தெரிய வந்தது. இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்