கோவை : கோவை போத்தனூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் கஸ்தூரி, முருகேஷ் ஆகியோர் நேற்று அங்குள்ள பிள்ளையார்புரம் செந்தமிழ் நகர் செட்டிபாளையம் ரோடு ஆகிய இடங்களில் ரோந்து சுற்றி வந்தனர் அப்போது கஞ்சா விற்று கொண்டிருந்ததாக பிள்ளையார்புரம் கஸ்தூரி கார்டனைச் சேர்ந்த முகமது உசேன் வயது 27 செந்தமிழ் நகரை சேர்ந்த பாவா வயது 26 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்