கோவை : கோவை, நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் கஞ்சா விற்று வரும் நபர்களை தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகின்றனர். அதேபோல தென் மாவட்டங்களில் இருந்து கடத்தப்பட்ட வரும் கஞ்சா கோவை நகர் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் தகவலை கண்காணித்து கடத்தி வரும் நபர்களை கைது செய்து வருகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும் கால் டாக்ஸி மற்றும் டெம்போ வேனில் கடத்த முயன்ற கஞ்சா மூட்டைகளை தமிழகப் போலீசாரும் கேரள போலீசாரும் பறிமுதல் செய்து கஞ்சா கடத்திய நபர்களை கைது செய்தனர். இதனால் கோவை நகர் மற்றும் புறநகர் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று காலை மதுக்கரை போலீசார் மதுக்கரை மரப்பாலம் கீழே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது கேரளா பதிவு எண் கொண்ட இருசக்கர என்ற வந்து கொண்டிருந்தவர்ளை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களது பைக்கின் ஒரு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபர்களை விசாரித்தபோது அவர்கள் கேரளாவை சேர்ந்த அகில் (20) சரோன் (20) ஆகியோர் என்பது தெரிய வந்தது.தொடர்ந்து அவர்கள் கடத்தி வந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கொண்டு வந்தனர். போலிஸார் அவர்களிடம் தொடர் விசாரணை மேற்க்கொண்டனர்.பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கேரளா கஞ்சா கடத்தல்காரர்களை கைது செய்த போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்