கோவை: கோவை, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக இன்று மாலை 4.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு 5.30 மணிக்கு கோவை வருகிறார். அவர், கோவை விமானநிலையத்தில் இருந்து கார் மூலம் சேலம் செல்கிறார். அங்கு நாளை காலை நடைபெறும் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் அரசு விழாவில் கலந்துகொள்கிறார்.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி கோவையிலும், அவர் செல்லும் பாதைகளிலும் மேற்கு மண்டல ஐ.ஜி.பெரியய்யா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்