கோவை : கோவையில் உள்ள சில மளிகைகடைகளிலும் பெட்டி கடைகளிலும்தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாநகர போலீசுக்கு தகவல் வந்தது போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின்பேரில் போலீசார் நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று மாலை அதிரடி சோதனைநடத்தினார்கள் அப்போது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது இதுதொடர்பாக நேற்று ஒரு நாள் மட்டும் நடந்த சோதனையில் 66 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர் இவர்களிடமிருந்து 4 ஆயிரம் பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்