கோவை : கோவை மாநகரில் இந்த ஆண்டில் 79 போக்சோவழக்குகள் பதிவு செய்ய்பட்டுள்ளது.. இதில் கடந்த 1ஆம் தேதி முதல் தற்போது வரை 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 18 வயதுக்குட்பட்ட சிறுமியை அவரின் சம்மதத்துடன் திருமணம் செய்தாலும், சம்பந்தப்பட்டவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும் .குழந்தை திருமணச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க படுவதோடு பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்படும் .இந்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. போக்சோ சட்டம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பவர்கள் மீதும் போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .இவ்வாறுஅவர் கூறினார்.
