கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு. சுமித் சரண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது கோவையில் இந்த ஆண்டு 184 24 சிசிடிவி கேமராக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகப்படியான குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன கோவை மாநகரில் 2019 ஆம் ஆண்டை காட்டிலும் அதிகமாக குற்ற செயல்களை கண்டுபிடிக்க இந்த சிசிடிவி கேமராக்கள் பேருதவியாக இருந்தது மக்களிடம் 5 734 மனுக்கள் பெறப்பட்டு மனுதாரரின் வீட்டுக்குச் சென்று விசாரணை செய்தும் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.
இந்த ஆண்டில் கோவையில் காணாமல் போன 253பேர் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர் அதில் 22 சிறுவர்களும் 57 சிறுமிகளும் 122 பெண்களும் 2 ஆண்களும் அடங்குவார்கள் இவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு உறவினருடன் ஒப்படைக்கப்பட்டனர். இந்த ஆண்டில் 1535 591 மோட்டார் வாகன வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அபராத தொகையாக 7 கோடியே 98 லட்சத்து86 ஆயிரத்து 95 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது அவற்றில் குடிபோதையில் வாகனங்களை ஓட்டுதல் அபாயகரமாக வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 16754 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய அனுப்பபட்டது..அதில் 14 618நபர்களின் ஓட்டுனர்,. உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் கோவை மாநகரில் நடந்த வாகன விபத்தில் 126 பேர் பலியாகி உள்ளனர் இந்த ஆண்டில் 65 பேர் தான் பலியாகியுள்ளனர் விபத்து பலி எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.
இந்த ஆண்டு 46பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அனைத்து வழக்குகளிலும் எதிரிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது மேலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு போஸ்கோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்குகளில் 4 வழக்குகளில் 2 வழக்கில் எதிரிகளுக்கு ஆயுள் தண்டனையும் 2 வழக்குகளில் 5ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் பெறப்பட்டுள்ளது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு போஸ்கோ வழக்குகள் அதிகமாக பதிவாகி உள்ளது இந்த ஆண்டு 27 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.
அனைத்து வழக்குகளிலும் எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது மேலும் 3 ஆதாயக் கொலை 3 கூட்டுக்கொள்ளை 53 வழிப்பறி 56732 திருட்டு குற்றங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 349 வழக்குகளில் 283 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது. களவாடப்பட்ட சொத்தின் மதிப்பு 2 கோடியே 97 லட்சத்து 60 ஆயிரத்து 304 ஆகும் இதில் 2 கோடியே 15 லட்சத்து 18 ஆயிரத்து 281 மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப் படைக்கப்பட்டுள்ளது புத்தாண்டு தினத்தன்று அரசு வழிமுறைகளை பின்பற்றி புத்தாண்டு கொண்டாட பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் எதிர்வரும் புத்தாண்டு வாகன விபத்து இல்லாத குற்றம் இல்லாத அமைதியான மகிழ்ச்சியான வெற்றிகரமான புத்தாண்டாக அமைய கோவை மாநகர காவல்துறையின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்