கோவை : காரமடை அருகே தோலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக காரமடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காரமடை இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் திரு.முனுசாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் திரு..பாலு, திரு.நாகேந்திரபாபு, மற்றும் போலீசார் தோலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் கிராமங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது தோலம்பாளையம் ஆலங்கண்டி புதூர் பகுதியில் சண்முகம் என்பவரது தோட்டம் அருகே கொடுங்கரை பள்ளத்தில் சேவல் சூதாட்டத்தில் சிலர் ஈடுப்பட்டு இருந்தனர். இதையடுத்து போலீசாரை பார்த்ததும், அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்த போது, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் 15 பேரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் ஆலங்கண்டிபுதூரை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 43), கோவை ராக்கிபாளையம் சித்ரா நகரை சேர்ந்த ரவி (48), துடியலூர் நேரு நகரை சேர்ந்த மகேந்திரன் (36), வினித் (29), கோவை டி.வி.எஸ். தெருவை சேர்ந்த கணேஷ்குமார் (27), கேரள மாநிலம் பாலக்காடு மடக்காடு பகுதியை சேர்ந்த காளிதாஸ் (46), காளியப்பன் (30), மேல் கோட்டத்துறையை சேர்ந்த மாரிமுத்து (64), மன்னார்காடு பகுதியை சேர்ந்த விஷ்ணு பிரகாஷ் (28), அகழி பகுதியை சேர்ந்த சிவகுமார், பெரியநாயக்கன்பாளையம் வெள்ளமடை பகுதியை சேர்ந்த நட்ராஜ் (45), கோவை வடவள்ளியை சேர்ந்த கவுதம் (21), காரமடை சின்னகண்டியூரை சேர்ந்த அருள்குமார் (34), சீலீயூரை சேர்ந்த கார்த்தி (24) உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்