கோவை: கோவை அம்மன் குளத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகன் நிகில் 21. பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. காம். 3-ம் படித்து வருகிறார். நேற்று அவரது செல்போனுக்கு இவரது தம்பி நிதின் 19. அழைப்பு விடுத்தார். அப்போது அவர் தன்னைஅம்மன் குளம் பண்ணாரியம்மன் கோவில் அருகே வைத்து 3 பேர் சேர்ந்து தாக்கி பணம் பறிப்பதாக கூறினார்.
உடனேநிகில் அந்த இடத்துக்கு சென்றார்.அங்கு நிதின் அழுது கொண்டிருந்தார். 3பேர் சேர்ந்து தன்னை தாக்கி தன்னிடமிருந்த ஆயிரம் ரூபாயும் மற்றும செல்போனையும் பறித்து கொண்டதாக கூறினார்.அவர்களிடம்நிகில் கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில்அந்த 3 பேரும் சேர்ந்து நிகிலைகத்தியால் குத்தினர் தடுத்தஅவரது தம்பி நிதினுக்கு பாட்டில் குத்து விழுந்தது. இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அந்த 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் நிகில் புகார் செய்தார் .போலீசார் அதே பகுதியை சேர்ந்த பிரவீன், மோசஸ், ஜெகன், ஆகியோர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
