திருவாரூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி, திருவாரூர் மாவட்டதில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களை தடுக்கும் வகையில் ரோந்து பணியில் காவலர்கள் அதிக அளவில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
வடபாதிமங்கலம் காவல் நிலைய பகுதியில் கோவில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர், சிவன் கோவில் தெருவை சேர்ந்த குமார் என்பவரின் மகன் கண்ணன் 27. மற்றும் நேரு நகரை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் முருகதாஸ் 24. ஆகிய இருவர் கைது.
அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம்-1 மற்றும் திருடப்பட்ட தொகை ரூபாய்.1,000/- பறிமுதல் செய்யப்பட்டது.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri.)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.