கோவை: நேற்று இரவு மர்ம ஆசாமி ஒருவன் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தன். பின்னர் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் 6830 ரூபாயை திருடி கொண்டிருந்தான்.
சத்தம்கேட்டு கோவில் அருகே குடியிருந்த சுரேந்திரன் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து அந்த ஆசாமியை கையும் களவுமாகபிடித்து துடியலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவனை கைது செய்தனர்.விசாரணையில் அருண் 19 என்பது தெரியவந்தது. இவனிடமிருந்த பணம் ரூ 6830 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்














