தூத்துக்குடி : கோவில்பட்டியில் தனியார் மதுபான பாரில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன் மது விற்பனை செய்வதாக காவல் துறையினர்ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் கோவில்பட்டி டி.எஸ்.பி. திரு.வெங்கடேஷ், தலைமையில், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.சுஜித் ஆனந்த், மற்றும் காவல் துறையினர், மார்க்கெட் சாலையில் உள்ள தனியார் மதுபான பாரில் இன்று காலை திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன் மதுவிற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த ரூ.28 ஆயிரத்து 500 மற்றும் 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மது விற்பனை செய்ததாக கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் கார்த்திக் (29), வள்ளிநாயகபுரத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சிவா (29), ஆகியோரை காவல் துறையினர், கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் உதவி ஆய்வாளர்கள் திரு.ஹரி கண்ணன், திரு. ராஜேஷ்கண்ணன், மற்றும் காவல் துறையினர், மந்திதோப்பு கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்த அருணாசலம் மகன் மாரியப்பன் (46), என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் 70 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இவற்றை கைப்பற்றி, மாரியப்பனை காவல் துறையினர், கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.