கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் சின்னஎல்லப்பா என்பவர் முனீஸ்வரர் கோவிலின் பூசாரியாக இருந்து வருவதாகவும் (24.09.2023) ஆம் தேதி இரவு 7.30 மணி அளவில் பூஜை செய்து முடித்து கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டதாகவும் (25.09.2023) ஆம் தேதி காலை 08.00 மணிக்கு கோவிலுக்கு பூஜை செய்ய சென்றபோது கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த சாமி வெள்ளி முகஅலங்கர பொருட்கள் சுமார் 750 கிராம் திருடி சென்று விட்டதாக (05.10.2023) ஆம் தேதி சின்னஎல்லப்பா காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து கோவிலில் வெள்ளி பொருட்களை திருடிய நபரை கைது செய்து அவரிடமிருந்து வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்