திருவாரூர்: திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி, மன்னார்குடி நெடுவாக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள காளியம்மன் கோவிலில் அம்மன் தாலியை திருடிய நபரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. மேற்படி, தனிப்படையினர் தொடர்ந்து தீவிர விசாரணை செய்தும், அப்பகுதியில் இருந்த CCTV பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தும் அம்மன் தாலியை திருடிய – தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கோவிலூர் வள்ளி நகரை சேர்ந்த ஜெயராமன் மகன் பிரகாஷ் (வயது-27). என்பவரை கைது செய்தனர். வேறு ஏதேனும் திருட்டு வழக்கில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து மேற்படி நபர் திருடிய தாலி மற்றும் தாலி குண்டுகள் 06 கிராம் பறிமுதல் செய்தனர்.
சிறப்பாக செயல்பட்டு திருட்டில் ஈடுப்பட்ட நபரை கைது செய்த மன்னார்குடி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வி.ஸ்ரீநிதி மற்றும் மன்னார்குடி Crime Team காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டதில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களை தடுக்கும் வகையில் ரோந்து பணியில் காவலர்கள் அதிக அளவில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.