கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் கடந்த 19.07.2021-ம் தேதியன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்காக “விழித்திரு” என்ற தனிப்பிரிவை உருவாக்கியுள்ளார். இப்பிரிவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், குழந்தை திருமணம்¸ குழந்தை தொழிலாளர்¸ மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்குவது¸
மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வது¸ குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளின் மூலம் விழிப்புணர்வுகள் வழங்கியும் வருகிறார்கள்.
மேலும் குழந்தைகளின் குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்ய அனைத்து காவல் நிலையங்களிலும் 2 பெண் காவலர்களை பணியமர்த்தி உதவிகள் செய்து வருகின்றனர்.
தொடர்பு எண்கள் : 9498181212 / 7708100100 / 0422-2300999.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்