காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒலிமுகமதுபேட்டை வேலூர் மெயின்ரோடு தெருவைச் சேர்ந்த கனகராஜ் த/பெ.லிங்கநாடார் என்பவர் கோணி வியாபாரம் செய்துவந்ததாகவும்.
இவருக்கு பானுமதி என்பவருடன் திருமணம் நடைபெற்று கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் மனைவியை பிரிந்து வாழ்ந்துவந்த நிலையில் ஷிலா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது, அடிக்கடி கனகராஜ் ஷீலாவின் வீட்டிற்கு வந்துசெல்வதால் ஷீலாவின் தம்பி இராஜீவ்காந்தி இதனை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் (12.08.21) அன்று கனகராஜ் மீண்டும் ஷீலாவின் வீட்டிற்கு வந்ததால் கோபமடைந்த இராஜீவ்காந்தி (எ) டோரி ( 30 ) த/பெ.அய்யர் நாடார் , மற்றும் அவரது நண்பர் உதயகுமார் (எ) உதயா 31 தொண்டைமான்நகர், உதயமாங்குளம் ஆகிய இருவரும் சேர்ந்து கனராஜீவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அம்மிக்கல் மற்றும் பீர் பாட்டிலால் கனகராஜை தாக்கிவிட்டு குற்றவாளிகள் இருவரும் சம்பவயிடத்திலிருந்து தப்பித்து தலைமறைவாகிவிட்டனர்.
இதில் படுகாயமடைந்த கனகராஜ் சம்பவயிடத்திலேயே இறந்துவிட்டார், மேற்படி சம்பவம் குறித்து தகவலறிந்த தாலுக்கா காவல்நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் அவரது தலைமையிலான குழுவினர் சம்பவயிடம் விரைந்து பிரேதத்தை கைப்பற்றி கொலைக்கு பயன்படுத்திய தடயங்களை சேகரித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M. சுதாகர் அவர்கள் எதிரிகளை பிடிக்க உத்தரவிட்டதின் பேரில் காஞ்சி தாலுக்கா காவல் ஆய்வாளர் திரு.இராஜகோபல் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான குற்றவாளிகள் 1) இராஜீவ்காந்தி (எ) டோரி 2) உதயகுமார் (எ) உதயா ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவ்வழக்கில் விரைவாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்த காஞ்சி தாலுக்கா காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினரை காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.Dr.M. சுதாகர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.