கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற “கேட்ட வரம் தரும்” கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தின் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு, இன்று (புதன்) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்றிரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. இந்த பவனியில் பக்தர்கள் கும்பிடு நமஸ்கார நேர்ச்சை நிகழ்சியில் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்வுகளில் ஈடுபட்டு வழிபாடு செய்தனர். குமரி மாவட்டத்தைத் தாண்டி நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அத்துடன் கேரளா மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும், ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பங்களுடன் வந்து பங்கேற்றனர். பேராலயம் மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் திருவிழாவை முன்னிட்டு பண்டிகை சூழல் நிலவுகிறது.















