கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் படித்த இளைஞர்கள், பல்வேறு தொழில் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். முகாமில் தேர்வு செய்யப்பட்ட1. 132 பேருக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான பணி நியமன ஆணையை கலெக்டர் தீபக் ஜேக்கப் (ம) ஓசூர் உதவி மாவட்ட ஆட்சியர் திரு.மதி சரண்யா (ம) மாநகராட்சி ஆணையர் திருமதி.சினேகா ஆகியோர் வழங்கினார். தொடர்ந்து திறன் வளர்ப்பு பயிற்சி பெற்ற 100 பேருக்கு பணி நியமன ஆணைகளையும், 7 பேருக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி ரூ. 1 கோடியே 56 லட்சம் மதிப்பிலான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்