அசாமில், லாரியில் கடத்தப்பட்டு வந்த 45 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை, காவல்துறையினர், பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர். வடகிழக்கு மாநிலமான மிசோரமில் இருந்து கரிம்கஞ்ச் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக, அசாம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், எல்லை பாதுகாப்புப் படையினருடன் இணைந்து, கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, கரிம்கஞ்ச் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், டிரைவர் கேபினில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 கோடி ரூபாய் மதிப்பிலான, ஹெராயினை பறிமுதல் செய்தனர். லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.