சென்னை : சென்னை தி.நகர் காவல்மாவட்டத்தில் கடந்த 20.10.2020 இரவு தனது நகை அலுவலகத்தில் திருடு போனதாக உரிமையாளர் திரு.தருண் குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.க.பா அவர்கள் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையாளர் தெற்கு (சட்டம் & ஒழுங்கு) திரு.ஆர்.தினகரன், இ.கா.ப அவர்களின் அறிவுரையின் பேரில் இணை ஆணையாளர் தெற்கு மண்டலம் திரு.ஏ.ஜி.பாபு, இ.கா.ப. அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்
காவல் துணை ஆணையாளர் தி.நகர் மாவட்டம் திரு.டி.என்.ஹரி கிரன் பிரசாத், இ.கா.ப. அவர்களின் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் உதவி ஆணையாளர்கள் தி.நகர் திரு. வ. கலியன் வளசரவாக்கம் திரு.மகிமைவீரன் மற்றும் அசோக் நகர் திரு.ரூபன் பிரன்க்கிளின் ஆகியோர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து சம்பவ இடத்தில் கிடைத்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது பழைய குற்றவாளியான மார்கெட்
சுரேஷ் என்பவன் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. மேலும தி.நகர் காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு தொழில் நுட்ப உதவியுடன் மார்கெட் சுரேஷ் சேர்ந்து இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 1) வெங்கடேசன் என்கிற அப்பு 2) அம்லராஜ் என்கிற விஷ்ணு 3) கங்காதேவி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் 1.4 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வைர நகைகளும் 11 கிலோ எடையுள்ள வெள்ளிகட்டிகள் சம்பவத்திற்கு பயன்படுத்தபட்ட இருசக்கர வாகனம் இரும்பு கம்பிகள் கைப்பற்றப்பட்டன. மார்கெட் சுரேஷ் திருவள்ளுர் மாவட்ட காவல் துறையினரால் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சட்டப்படி கைது செய்து போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து களவாடப்பட்ட நகைகளில் மீட்கப்படாத நகைகள் கைப்பற்றப்பட உள்ளது. குற்றவாளிகளை கைது செய்து வழக்கு சொத்துகளை உடனடியாக மீட்ட தனிப்படைகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டினார்.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சாஹித் உசேன்
மாநில தலைவர்
இளம் குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா