கோவை : கோவை மாநகரம் D -1 ராமநாதபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த (21/3/2023),ஆம் தேதி ராஜேஸ்வரி (63) கிரீன் பீல்டு காலனி, புளியகுளம் ரோடு, கிட்னி சென்டர், கோவை என்பவர் தனது வீட்டில் கடந்த (20/3/2023), ஆம் தேதி இரவு வர்ஷினி என்பவர் ராஜேஸ்வரிக்கு நாட்டுக்கோழி குழம்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சாப்பிட வைத்து ராஜேஸ்வரி மயக்கநிலை அடைந்தவுடன் வர்ஷினி அவரது நண்பர் அருண்குமார், மற்றும் டிரைவர் நவீன் குமார், ஆகிய மூவரும் சேர்ந்து ராஜேஸ்வரி வீட்டில் உள்ள தங்க வைர நகைகள் சுமார் 100 பவுன் மற்றும் பணம் ரூபாய் இரண்டரை கோடி ஆகியவற்றை திருடிச் சென்று விட்டதாக ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள், மற்றும் காவல் துறை ஆணையர் தெற்கு திரு. சண்முகம் அவர்கள், உத்தரவுப்படி போத்தனூர் சரக காவல் உதவி ஆணையர் திரு.கரிகால் பாரிசங்கர் அவர்களின் மேற்பார்வையில் ராமநாதபுரம் காவல் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.பிரபாவதி அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.ஜெசிஸ் உதயராஜ் மற்றும் காவலர்கள் லோகேஷ், ராஜேஷ், ஆனந்தகுமார், ஆகியோர்கள் கொண்ட தனி படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் கடந்த (21/3/2023), -ம் தேதி குற்றவாளி கரோலினி ஜெசிந்தா மேரி என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூபாய் 5 லட்சம் கைப்பற்றப்பட்டது.
மேலும் குற்றவாளி கார்த்திக் மற்றும் சுரேந்தரை (24.3.2023) ஆம் தேதி கைது செய்து அவர்கள் சம்பவத்திற்கு பயன்படுத்திய KA 09 MA 6594 என்ற பதிவு எண் கொண்ட சிவப்பு கலர் காரையும் கைப்பற்றப்பட்டது. குற்றவாளிகளில் அருண்குமார் பிரவீன் மற்றும் சுரேந்தர் ஆகியவர்களை (02/05/2023), ஆம் தேதி கைது செய்யப்பட்டு அருண்குமாரிடமிருந்து 2 லட்சம் மற்றும் சுமார் 31 சவரன் கைப்பற்றப்பட்டது. அருண்குமார் திருடிக் கொண்டு சென்ற பணம் ரூபாய். 3120500/- சேலம் வருமானவரித்துறையினரால் கைப்பற்றப்பட்டு வருமான வரி துறையினரின் விசாரணையில் இருந்து வருகிறது. (10/06/2023) ஆம் தேதி வழக்கின் முக்கிய குற்றவாளிகளான வர்ஷினி மற்றும் நவீன் குமார், ஆகிய இருவரையும் கைது செய்து வர்ஷினிடம் சுமார் 70 சவரன் தங்க வைர வளையல்கள் மற்றும் 35 லட்சம் TN 37 DH 8000 BREZZA என்ற கார் மற்றும் ஒரு ஐ போன் ஒன்றையும் நவீன் குமார் இடம் இருந்து பணம் 5 லட்சம் மற்றும் காரையும் கைப்பற்றப்பட்டது. மொத்தம் மேற்படி வழக்கில் தங்க வைர நகைகள் 100 சவரன் மற்றும் பணம் 48 லட்சம் மற்றும் ஒரு ஐ போன் ஒன்று ஆகியவை கைப்பற்றப்பட்டது மேலும் பணம் ரூபாய் 3120500/- லட்சத்தை சேலம் வருமான வரித்துறை அலுவலகத்தில் உள்ளது மேலும் வர்ஷினிக்கு பொள்ளாச்சி கிழக்கு தாராபுரம் காவல் நிலையம் சிங்காநல்லூர் மற்றும் கோவை மாநகர குற்ற பிரிவிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளது வழக்கு புலன் விசாரணையில் உள்ளது என்பதை தெரிவித்துள்ளனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்