இந்தியாவின் வட மாநிலங்களில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. நடிகைகள், நடிகர்கள் பலர் போதைப்பொருள் வழக்குகளில் சிக்குகின்றனர். அண்மையில் மும்பையில் சொகுசு கப்பலில் நடைபெற்ற போதை பார்ட்டியில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். 28நாட்கள் சிறை வாசத்திற்குப் பிறகு ஆர்யன் கானுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இச்சம்பவத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பல இடங்களில் கோடிக்கணக்கில் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மும்பையின் விலி பார்லி பகுதியில் போதைப் பொருள் பழக்கம் இருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் கோடிக்கணக்கில் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
போலீசார் வருவதை அறிந்து போதைப்பொருள் கும்பல் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளது. போதைப்பொருள் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் மதிப்பு எத்தனை கோடி என்பது குறிப்பிடத்தக்கது.