வேலூர் : வேலூர் மாவட்டம் சின்ன கோவிந்தம்பாடி அருகே (29.09.2022)-ம் தேதி
இரவு 11.00 மணியளவில், சந்தேகம் படும்படியாக நான்கு நபர்கள் ஒரு காரில் இருந்து ஒரு லாரிக்கு ஏதோ பண்டல்களை ஏற்றிக் கொண்டிருந்தவர்களை
பள்ளிகொண்டா காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. பாஸ்கர், தலைமையிலான ரோந்துக் காவலர்கள் மடக்கிப்பிடித்து விசாரித்து அந்தப் பண்டல்களைச்
சோதனை செய்ததில் 14 கோடியே 70 லட்சத்து 85 ஆயிரத்து நானூறு ரூபாய் கணக்கில் வராத கறுப்புப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கிருந்த காவலர்களைத் தாக்கி தப்பிக்க முயன்ற நான்கு பேரையும் காவலர்கள் லாவகமாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்த ரொக்கப் பணம்,
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் காரை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவத்தில் துணிச்சலாக செயல்பட்டு கடத்தலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த உதவி ஆய்வாளர்கள் திரு.பாஸ்கரன் மற்றும் ராஜகுமாரி, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வெங்கடேசன் மற்றும் காவலர் திரு. பிரேம் குமார் ஆகியோரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்,படைத்தலைவர் முனைவர் திரு. செ. சைலேந்திர பாபு, IPS., அவர்கள் டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் பண வெகுமதி அளித்துப் பாராட்டினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்