கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள புனித ஜான் போஸ்கோ மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய கோகோ கூட்டமைப்பு சார்பில் கேலோ இந்தியா தெற்கு மண்டல அளவிலான 14 மற்றும் 18 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கோகோ லீக் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஓசூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாபு பிரசாந்த் பள்ளியின் தாளாளர் ஏஞ்சலா ஆகியோர் புறாக்களை பறக்க விட்டு தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த கோகோ விளையாட்டில் தேசிய அளவில் விளையாடி வெற்றி பெற்ற மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டிகளில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டிகள் இன்று நிறைவடைகிறது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்