திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் பெட்ரோல் பங் நடத்தி வருபவர் கல்கி தாஸ்(22). இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெட்ரோல் பங்கில் கணக்கு முடித்துவிட்டு மேஜையில் வைத்து பணத்தை, சரி பர்க்கும் போது பைக்கில் பெட்ரோல் போட வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் மாஸ்க் போட்டுக்கொண்டு கத்தியை காட்டி மிரட்டி மேஜையில் வைத்திருந்த 31 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பைக்கில் வேகமாக சென்று விட்டனர்.
இதுகுறித்து திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் உத்தரவின்பேரில், திருப்பாலைவனம் ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டி, உதவி ஆய்வாளர் மகாலிங்கம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடி கேமரா கேமரா மூலம் கொள்ளையர்களை தேடி கண்டுபிடித்தனர்.
பொன்னேரி அடுத்த காவல் பட்டியைச் சேர்ந்த மணிகண்டன்(21) மீஞ்சூர் அடுத்த தோட்ட காலனியை சேர்ந்த விஷ்ணு (வயசு 22) ஆகியோர் என்பது தெரியவந்தது பின்னர் அவர்களிடம் இருந்த கத்தி செல்போன் 31,000 பணம் ஆகியவற்றை கைப்பற்றி தீவிர விசாரணை செய்ததில் கடந்த ஒரு வருடமாக முகமூடி அணிந்து கொண்டு கொள்ளை அடிப்பதும் பொன்னேரி மீஞ்சூர் அலமாதி செங்குன்றம் உள்ளிட்ட பல பகுதிகளில் நண்பர்களை சேர்த்து வைத்துக்கொண்டு கூட்டுக் கொள்ளை அடிப்பது தெரியவந்தது போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர் கூட்டாளிகளை பிடிப்பதன் பல உண்மைகள் தெரிய வரும் என்றனர் இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்