தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உட்கோட்டம் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட இரு குற்றவாளிகளுக்கு (11.11.2024) கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர்-1 அவர்கள் 9 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதித்த உத்தரவின் பேரில் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.