திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சர்க்கார் பெரியபாளையம் கிளை பேங்க் ஆப் பரோடா முன்பு வைக்கப்பட்டிருந்த ஏடிஎம் இயந்திரத்தை 1இ00இ100ஃ- பணத்துடன் கடந்த 28. 2. 2021 தேதி அதிகாலை 4 மணி அளவில் டாட்டா சுமோ காரில் வந்த மர்ம நபர்கள் இயந்திரத்துடன் காரில் கட்டி இழுத்த கொள்ளையடித்து சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷா மித்தல் அவர்களின் உத்தரவுப்படி, திருப்பூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில், காங்கேயம் துணை கண்காணிப்பாளர் தனராசு தலைமையில் ஊத்துக்குளி காவல் ஆய்வாளர் திரு.பாலசுந்தரம், காங்கேயம் காவல் ஆய்வாளர் திரு.மணிகண்டன் மற்றும் வெள்ளக்கோயில் காவல் ஆய்வாளர் பார்த்திபன், ஊத்துக்குளி சார்பு ஆய்வாளர் திரு.முருகேசன், திரு.கோபால், திரு.காமராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வேலுச்சாமி மற்றும் மதியழகன் ஆகியோர் அடங்கிய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர் .
அதன்படி நேற்று மாலை 6 மணி அளவில் ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனி தனியாருக்கு சொந்தமான குடோனில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ராகுல் ரபீக், ஷாகித், சாஜித், இர்ஷாத், காசிம் கான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் கொள்ளையடிக்கப்பட்ட பயன்படுத்திய கண்டனர் லாரி கொள்ளையடித்த பணம் 69,120 மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய இரண்டு நாட்டு துப்பாக்கிகள், 9 ஆக்சிஜன் சிலிண்டர், கேஸ் கட்டர், மேலும் திருடப்பட்ட ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்ட நிலையில் விஜயமங்கலம் அருகிலும் கைப்பற்றப்பட்டது. மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகள் கொள்ளையடிக்க பயன்படுத்திய டாடா சுமோ கார், பெருந்துறை நல்லி கவுண்டன் பாளையம் பாலசுப்ரமணி என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்நது.
மேற்படி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற காவலுக்கு, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த தனிப்படையினருக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.தினகரன் ஐபிஎஸ் அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்